கவினின் “கிஸ்” திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவர் கவின். இவர் ‘நட்புன்னா என்னானு தெரியுமா’, ‘லிப்ட்’, ‘டாடா’ உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவரது நடிப்பில் கிஸ் என்ற படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தினை அறிமுக இயக்குனர் சதீஷ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக ‘அயோத்தி’ படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகை பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். மேலும் மிர்ச்சி விஜய், விடிவி கணேஷ், ராவ் ரமேஷ், தேவயானி என பலரும் நடித்திருந்தனர். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்த இப்படம் தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.பேண்டஸி ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில் உருவான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சதிஷ் இயக்கத்தில் கவின், பிரீத்தி அஸ்ரானி நடிப்பில் உருவான ‘கிஸ்’ திரைப்படம் வரும் நவம்பர் 7ம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாக உள்ளதாக ஜீ5 ஓடிடி தளம் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here