பிடிவாதம் வேண்டாம்

கோலாலம்பூர். மார்ச் 25-

பொது ஒன்றுகூடலில் கலந்துகொண்டவர்களுக்கு கொரோனா19 தொற்று இருப்பதை மருத்துவம் போலீஸ்துறை ஒப்ப்புக்கொண்டிருக்கிறது.

ஸ்ரீ செர்டாங் பள்ளிவாங்லில் தப்ளிக் எனப்படும் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதால் அவர்கள் முன்வந்து பரிசோதனைக்கு ஆட்படவேண்டும் என்று சிலாங்கூர் மாநில சுல்தான் ஷராஃபுடின் அறைகூவல் விடுத்திருக்கிறார்.

நாட்டுக்குச் சோதனை வரும்போது அதில் மக்கள்தான் பாதிக்கப்படுகின்றவர்களாக இருப்பார்கள். மக்கள் தங்களை அறியாமல் தவறிழைத்திருப்பார்கள். தவறு என்று உணரும்போது அவர்களாகவே முன்வந்து சோதனைக்கு உட்பட்டிருக்கவேண்டும்.

அப்படிச்செய்யாமல் தலைமறைவாக இருப்பதால் விபரீதங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
இதைத்தடுக்கும் நடவடிக்கை அடுத்த மாதம் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படிருக்கிறது. ஆனாலும் கோவிட் 19 தொற்று எண்ணிக்கை குறைந்த பாடில்லை.

தப்ளிக் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் இன்னும் அலட்சியம் காட்டுவது ஆபத்தாகவே இருக்கும். ஆதலால் தாங்களே முன்வந்து பரிசோதனைக்கு உட்படுமாறு சுல்தான் ஷராஃபுடின் அரச அலுவலக முகநூல் அகப்பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

பிடிவாதமிக்க பங்கேற்பாளர்கள் ஆயரக்கணக்கில் பரிசோதித்துக் கொள்ளாமல் தவிர்த்து வருகின்றனர். இதன்பாதிப்பு அதிகமாகி வருவதைப்பற்றி இவர்கள் கவலைப்படவில்லை. ஆதலால் மக்கள் நடமாட்டத்தைப் பின்பற்றுமாறு சுல்தான் அறிவித்திருக்கிறார். சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மாநிலத்தின் நிலைமை குறித்தும் அவரிடம் விளக்கிவருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here