ஐப்பசி பெளர்ணமியன்று சிவன் ஆலயங்களில் அன்னாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெறும். அந்த வகையில் கம்போங் காசிபிள்ளை ருத்ரா தேவி சமாஜத்திலும் அன்னாபிஷேகம் மிக விமரிசையாக நடைபெற்றது.
சமாஜத்தின் ஸ்தாபகர் சங்கரத்னா சுப்ரமணியம் பக்கிரி சாமி கூறுகையில் ஐப்பசியில் வரும் பெளர்ணமி மிகவும் விசேஷமானது. அன்று தான் சிவன் உலக மக்களுக்கு உணவை தந்ததாக ஐதீகம். அதனால் அனைத்து சிவன் ஆலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறும் என்றும் நமது சமாஜத்திலும் வருடந்தோறும் அன்னாபிஷேகம் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.






























