பாலிங்கில் திருமணம் நடந்த இரண்டே நாட்களில் தூக்கில் தொங்கிய புதுமாப்பிள்ளை

பாலிங், கோலா பெகாங்கில் உள்ள கம்போங் லுபுக் காபுவில் திருமணமாகி இரண்டு நாட்கள் மட்டுமே ஆன ஒருவர் இன்று வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது.

பெரித்தா ஹரியானில் வெளியான ஒரு அறிக்கையின்படி,  இந்த சடலம் குறித்த் தகவல் கிடைத்ததாகவும், சம்பவ இடத்திற்கு ஒரு குழு அனுப்பப்பட்டதாகவும் பாலிங் மாவட்ட காவல்துறைத் தலைவர் துணை கண்காணிப்பாளர் அகமது சலிமி எம்.டி அலி தெரிவித்தார்.

34 வயதான கிராமவாசி ஒரு வீட்டின் அருகே சுமார் ஐந்து மீட்டர் உயரமுள்ள வேப்ப மரத்தில் ஏறியதாக முதற்கட்ட சோதனைகள் கண்டறிந்ததாக அகமது சலிமி கூறியதாக கூறப்படுகிறது. அந்த நபர் இரண்டு நாட்களுக்கு முன்புதான் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

குபாங் சுகாதார மருத்துவமனையின் மருத்துவ ஊழியர்கள், அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறதுி இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய, உடல் அலோர் செத்தாரில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here