சிரம்பான்: புதன்கிழமை (நவம்பர் 19) நள்ளிரவுக்கு சற்று முன்பு நுசாரி பிஸ் செண்டாயனில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இரவு 11.25 மணியளவில் துப்பாக்கிச் சூடு குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக சிரம்பான் ஓ.சி.பி.டி உதவி ஆணையர் அசாஹர் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு குறித்து புகார் அளிக்க பொதுமக்களில் ஒருவர் போலீசாருக்கு போன் செய்தார். நாங்கள் இன்னும் வழக்கை விசாரித்து வருகிறோம் என்று அவர் கூறினார். சம்பவத்திற்கு சற்று முன்பு உணவகத்தில் இரண்டு கார்கள் வந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதற்கு முன்பு பாதிக்கப்பட்டவர் திடீரென எழுந்து ஓடினார். சிறிது தூரத்தில் அவர் சரிந்து விழுந்த அவர் மருத்துவக் குழுவால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.









