ஞானிகளின் வாழ்க்கையை பின்பற்றி வாழ்வில் நலம் பெறுவோம்: முத்துகுமார சுவாமி

நமக்கு நல்லொழுகத்தையும் வாழ்வின் அர்த்தத்தையும் கற்று கொள்ள வந்தவர்கள் என்று ஞானிகள் என்று கூறுவர். அந்த வகையில் சத்குரு  சித்ரமுத்து அடிகள் 1900ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தின் பனைக்குளத்தில் பிறந்தார். முத்து 1922ஆம்ஆண்டில் மலாயா நாட்டிற்குப் புறப்பட்டு, பேராக் மாநிலத்தின் கோல கங்சாரில் தங்கினார். தாப்பா பகுதியில்  ஜெகநாதர் சுவாமியைச்  சந்திக்கும் பாக்கியம் அவருக்கு கிடைத்தது என்று   சித்ரமுத்து அடிகளாரின் 125ஆம் ஆண்டு ஜெயந்தி விழாவின் போது  முத்து குமார சுவாமி சிவாச்சாரியார் விவரித்தார்.

ஜெகநாதர் சுவாமி முத்தைத் தனது சீடராக ஏற்று, அவருக்கு சித்ரமுத்து என்ற தீட்சாநாமம் சூட்டினர். ஜெகநாதர் சுவாமி தனது சீடரான சித்ரமுத்துவிற்கு ஆத்மஞானத்தை உணருவதற்கும், அவருடைய முழு திறமையைவெளிக்கொணருவதற்கும் அவரது வாழ்க்கைநேயத்தை உணருவதற்கும் வழிகாட்டினார். 1940ஆம் ஆண்டு, தைப்பிங் ஆற்றின் அமைதியான கரையில், ஆயாசம் அகன்று காயாசம் ஏற்றார் முத்துகுமார சுவாமி தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய சுவாமி கோவிந்தன் ஞானிகளின் வழியைப் பின்பற்றினால் வாழ்க்கை செழிக்கும். நம்முடன் வாழ்ந்து மறைந்த சித்ரமுத்து அடிகளாரின் 125ஆம் ஆண்டு ஜெயந்தி விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார். ஈப்போ அருளொளி மையத்துடன் நாட்டில் இயங்கி வரும் முக்கிய அருளொளி மையங்களின் கூட்டு முயற்சியில் இந்த ஜெயந்தி விழா மிக விமர்சையாக நடைபெற்றது மிகவும் வரவேற்கத்தக்கது என்றார்.

இந்த ஜெயந்தி விழா மிக விமர்சையாக நடைபெற உதவிய அனைத்து நல்லுளங்களுக்கும் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்வதாக கிள்ளான் செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் கம்போங் காசிப்பிள்ளை ருத்ரா தேவி சமாஜத்தின் தலைவருமான குணராஜ் தெரிவித்தார். அடிகளாரின் ஜெயந்தி விழா இனி வரும்  ஆண்டுகளிலும் சிறப்பாக நடைபெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here