சமூக கடற்பாடு என்பது அனைவருக்கும் பொதுவானது என்றாலும் பெரு நிறுவனங்களுக்கு அதிக பொறுப்பு இருக்கிறது என்பதற்கு கேகே சூப்பர் மார்ட் முன்னுதாரணமாக விளங்குகிறது என்றால் அது மிகையாகாது. கேகே சூப்பர் மார்ட் இனம் மதம் பாராமல் தேவைப்படும் பல உதவிகளை வழங்கி வருகிறது.

மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல் புறப்பாட நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கில் 14ஆவது ஆண்டாக KK GOJUKAI கராத்தே போட்டியை நடத்தி வருகிறது. ஜப்பானை தளமாக கொண்ட KK GOJUKAI சிலாங்கூர் ஓஃபன் கராத்தே போட்டி கேகே சூப்பர் மார்ட் ஏற்பாட்டில் சவூத் சிட்டி பிளாசா மாலில் இரு நாட்கள் போட்டி நடைபெற்றது.
இதில் சிரியா, பாகிஸ்தான், வங்காளதேசம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் உட்பட வீரர்கள் உள்ளிட்ட 550க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கராத்தே போட்டி குறித்து கேகே சூப்பர் மார்ட்டின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோஶ்ரீ டாக்டர் கேகே சாய் இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்பதால் அவர்களின் கல்விக்கும் அதே வேளை அவர்களுக்குள் இருக்கும் புறப்பாட நடவடிக்கைகள் (போட்டி விளையாட்டு) ஆர்வத்தை கண்டறிந்து ஆக்கமும் ஊக்கமும் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 14ஆவது ஆண்டாக KK GOJUKAI சிலாங்கூர் ஓஃபன் கராத்தே போட்டியை நடத்தி வருகிறோம் என்றார். இவ்வாண்டு மலேசியாவில் புகழ் பெற்ற பல பரிசுகளை வென்ற கராத்தே வீரர்களும் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டி விளையாட்டிற்காக எங்களுடன் இவ்வாண்டு இணைந்திருக்கும் 100 பிளஸ், நெட்ஸ்லே, மைலோ, சன் அப், 7ரிங்க்ஸ், மைதி வெயிட் ஆகிய நிறுவனங்களுக்கு இவ்வேளையில் நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறினார். பல பிரிவுகளாக நடைபெற்ற KK GOJUKAI சிலாங்கூர் ஓஃபன் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டது.










