போலி ஆவணங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 62 வெளிநாட்டவர்கள் கைது

கிளந்தான்:

மாநிலக் குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட சிறப்பு சோதனையில், தோட்டத் தொழிலில் ஈடுபட்டு வந்த 62 வெளிநாட்டினர்கள் (அதில் 1 பெண் உட்பட) போலி ஆவணங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குவா மூசாங்கில் உள்ள Lojing தோட்டப் பகுதியில் நேற்று இரவு மேற்கொண்ட நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய கிளாந்தான் மாநிலக் குடிநுழைவுத் துறை துணை இயக்குநர் முஹமட் யூசூப் கான் கூறிறுகையில், சோதனையில் கைது செய்யப்பட்டவர்களிடம் பொய் கடப்பிதழ்கள் (Fake Passports) உட்பட பல்வேறு வகையான போலியான பணிவிசா மற்றும் தொழிலாளர் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களிடம் மேற்கொண்ட முந்தைய ஆய்வில் அனைவருக்கும் ஆவணங்கள் இருந்தது — அதன் பின்னர் தமது குழுவிற்கு சந்தேகம் ஏற்பட்டது என்றார்.

கடந்த வாரம் இதே பகுதியில் மேற்கொண்ட முதல் சுற்று சோதனையில், வெளிநாட்டினர்கள் அனைவரிடமும் முறையான கடப்பிதழ்கள் இருப்பதாக கூறப்ப்பட்டது. இதைத் தொடர்ந்து, குடிநுழைவுத்துறையினர் அந்தக் கடப்பிதழ்களின் விவரங்களை தரவிறக்கி ஆய்வு செய்தபோது, பல ஆவணங்கள் போலியானவை என கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அந்தத் தகவலின் அடிப்படையில் நேற்று இரவு மீண்டும் நடத்தப்பட்ட சோதனையில், 62 பேரை கைது செய்யத் துறையினர் முடிந்தது என்றார் .

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் குடிநுழைவு சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த போலி ஆவணங்களை வழங்கிய நெட்வொர்க் குறித்தும் துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here