AI பயன்பாடு முறையாக இயக்கப்படுவதை இலக்கியவியல் துறை உறுதி செய்யும்: கோபிந்த்

மக்களிடையே நல்லிணக்கத்தை வளர்க்க உதவும் செயற்கை நுண்ணறிவு தவறாகப் பயன்பாடுகளை அரசாங்கம் கடுமையாகக் கருதுவதாகவும், அதற்குத் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இன்று நாடாளுமன்றத்தில் பதிவு செய்தார்.

சமூகத்தினரிடையே நல்லிணக்கத்தைப் பேணுவதற்காக, குறிப்பாக பொதுத் தேர்தல் காலத்திற்கு முன்னதாக, மக்களைக் குழப்புவதோடு, சமுதாய ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக விளங்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை அரசாங்கம் கடுமையாகக் கருதுகிறது. இந்தத் தவறான செயல்பாடுகளை ஏதிர்கொள்ளவும்,இதுபோன்ற சிக்கல்களைச் சமாளிக்கவும், மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) சட்டம், உள்ளடக்கக் கண்காணிப்பு இது தொடர்பான பொது விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய பல அணுகுமுறையை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது.

அதோடு, செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு தொடர்பான சிறப்பு சட்ட மசோதாவை இலக்கவியல் அமைச்சு திட்டமிடும்  வேளையில், செயற்கை நுண்ணறிவு (AI) அரசியலமைப்புச் சட்டத்தை இயக்கவும், செயற்கை நுண்ணறிவு (AI) சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளையும் உள்படுத்திய வரைவு சட்டங்களை செயல்படுத்துவதை கண்காணிக்கவும் சிறப்பு செயற்குழுவை இலக்கவியல் அமைச்சு உருவாக்கியுள்ளது.

2024 சைபர் பாதுகாப்பு சட்டம், 2024 தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் (திருத்தம்),  2024 ஆன்லைன் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் வழி தற்போதைய சட்டங்களும் வலுப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தேசிய சைபர் பாதுகாப்பு நிறுவனம் (NACSA), பழைய 1997 கணினி பாதுகாப்பு சட்டத்திற்கு பதிலாக, புதிய சைபர் பாதுகாப்புச் சட்ட மசோதாவையும் உருவாக்கி வருகிறது.

இணைய உள்ளடக்கக் கண்காணிப்பு துறையில், மலேசிய தகவல் தொடர்பு, மல்டிமீடியா ஆணையம் (MCMC), 1998 தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, போலித் தகவல்களைப் பரப்புதல், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைப் பரப்புதல்,deepfake போன்ற தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தப்படுவதை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக பொதுத் தேர்தல் காலம் நெருங்கும் நிலையில், தவறான தகவல்களைப் பரப்புதல், மற்றும் பொதுமக்களின் கருத்துகளை தவறாகச் சித்தரித்து, குழப்பும் அபாயம் அதிகரிப்பதால், இந்தக் கண்காணிப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

இலக்கவியல் விழிப்புணர்வு மற்றும் இலக்கவியல் அறிவாற்றல் கொண்ட மக்கள் வழி தவறான தொழில்நுட்பப் பயன்பாட்டைத் தவிர்க்க இயல்வதோடு, இவர்களால் இலக்கவியல் தொழில்நுட்பப் பாதுகாப்பு அரணாக விளங்க முடியும்.   தவறான பயன்பாட்டைத் தடுக்க இலக்கவியல் அறிவாற்றல் கொண்ட மக்கள்’ என்பதே முதன்மை பாதுகாப்பு என அரசாங்கம் உணருகிறது. இதற்காக பல்வேறு விழிப்புணர்வு மற்றும் கல்வி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இலக்கவியல் அமைச்சின் கீழ் இயங்கும் அரசு நிறுவன “Rakyat Digital இணையத்தலம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆன்லைன் அபாயங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவை நெறியுடன் பயன்படுத்துவதற்கு வேண்டிய மக்களின் புரிதலை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டதாகும். குறிப்பாக, மக்களிடையே தேர்தல் காலத்தில் ஏற்படும் டிஜிட்டல் முறைகேடுகளையும்அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் வலுவை சமுதாயம் பெறுவதை உறுதிபடுத்துதல் என பல திட்டங்களை அமல்படுத்தியுள்ளது.

அதோடு இலக்கவியல் அமைச்சின் தனிநபர் தரவு பாதுகாப்புஇலாகா, (JPDP) மூன்று முக்கிய வழிகாட்டுதல்களை உருவாக்கி வருகிறது, அவை:

i) தரவு பாதுகாப்பு தாக்க மதிப்பீடு (DPIA) வழிகாட்டுதல்கள்,

ii) வடிவமைப்பு மூலம் தரவு பாதுகாப்பு (DPbD) வழிகாட்டுதல்கள்

iii) தானியங்கி தரவு செயலாக்கம் மற்றும் விவரக்குறிப்பு (ADM) வழிகாட்டுதல்கள் ஆகும்.

தனிநபர் தரவை துல்லியமாகப் பாதுகாப்பதில் குறைந்தபட்ச அளவிலான சான்றுகள், நடைமுறை நடவடிக்கைகளை வழங்குவதற்காக, பொதுக் கலந்தாய்வு கருத்துக்கள்  தொழில்சார் துறையினரிடம் பெறப்பட்ட கருத்துகள்  அடிப்படையில் இந்த வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டவை. தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் 2010 (சட்டம் 709) இல் செய்யப்பட்ட திருத்தங்கள், தரவு பாதுகாப்பு அதிகாரியை (DPO) நியமிக்க வேண்டிய அவசியத்தையும், இந்த இலாகா ஏற்றுள்ளது.

தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் 2010 (சட்டம் 709) இல் செய்யப்பட்ட திருத்தங்கள், தரவு பாதுகாப்பு அதிகாரியை (DPO) நியமிக்கும் கடமையை அறிமுகப்படுத்துவதன் மூலம் நிறுவனப் பொறுப்புகளை வலுப்படுத்தியுள்ளன. விவரக்குறிப்பு மற்றும் தானியங்கி முடிவெடுத்தல் உள்ளிட்ட தரவு செயலாக்கம் ஆகியவற்றை நெறியோடும், சட்டத்திற்குட்பட்டும்,மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வது DPO பொறுப்பாகும்.

இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை வழி, அரசாங்கம் பாதுகாப்பான, பொறுப்பான மற்றும் மீள்தன்மை கொண்ட AI கட்டமைப்பை உருவாக்க இலக்கவியல் அமைச்சு உறுதிபூண்டுள்ளது. அதே வேளையில் சமூகத்தின் நல்லிணக்கத்தையும்  பேண முடியும் என்பதை உறுதி செய்கிறது.

மலேசிய மக்களிடையே நல்லிணக்கத்தைப் பேண, குறிப்பாக வரவிருக்கும் பொதுத் தேர்தல் காலத்திற்கு முன்னதாக, வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் துஷ்பிரயோகம் அல்லது அச்சுறுத்தலைத் தடுப்பதற்கான கண்காணிப்பு மற்றும் முன்னேற்பாடுகள் தொடர்பாக தம்பீன் நாடாளுமன்ற உருப்பினர், டத்தோ முகமட் இசாம் பின் முகமட்எழுப்பிய கேள்விக்கு இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மேற்கண்டவாறு பதிலளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here