இந்தோனேசியாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 303 ஆக உயர்வு

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 303 ஆக உயர்ந்துள்ளது என்று அந்த நாட்டு பேரிடர் தணிப்பு நிர்வாக முகாமைத்துவ தலைவர் தெரிவித்தார்.

மலாக்கா நீரிணையில் உருவான சூறாவளியின் தாக்கத்தால், கடந்த ஒரு வாரமாக இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தொடர்ச்சியாக கன மழை பெய்து வருகிறது. இதன் விளைவாக சுமத்ரா தீவின் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போது குறைந்தது 279 பேர் காணாமல் போயுள்ளனர்; அவர்களைத் தேடும் மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமத்ராவின் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மூன்று மாவட்டங்களிலிருந்து சுமார் 80,000 பேர் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். பல பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் நூற்றுக்கணக்கானவர்களை மீட்கும் பணி தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.

தீவின் வடக்கு பகுதி நிலச்சரிவால் சாலைகள் துண்டிக்கப்பட்டு, தகவல் தொடர்பு உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதம் அடைந்ததால், அப்பகுதிகளில் உதவி மற்றும் தளவாட நடவடிக்கைகளை ஹெலிகாப்டர்கள் மூலம் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here