பகடிவதைத் தடுப்பதற்கான அவசர தொடர்பு எண்ணை அறிமுகப்படுத்தியது மஇகா

கோலாலம்பூர்:

நாடெங்கிலும் செயல்படும் பகடிவதைத் தடுப்பதற்கான அவசரத் தொடர்பு எண்ணை மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) அறிமுகப்படுத்தியுள்ளது.

இளைய தலைமுறையினரிடையே பகடிவதை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அக்கட்சி எதிர்கொள்ள வேண்டிய சவால்களை கையாளவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பகடிவதைத் தடுப்பு அவசரத் தொடர்பு எண்ணை மஇகா துணைத் தலைவர் மற்றும் தாப்பா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எம். சரவணன் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சி மலேசியாவின் தேசிய தினக் கொண்டாட்டத்தையொட்டி நடைபெற்றது.

பகடிவதால் பாதிக்கப்படும் நபர்கள் புதிய அவசரத் தொடர்பு எண்ணின் மூலம் உடனடியாக உதவி பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பகடிவதைப் பற்றிய தகவல்களை அறிந்தவர்கள் அதே எண்ணின் மூலம் அறிவிக்கலாம்.

மலேசிய அரசு பகடிவதற்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சூளுரை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here