சிரியாவில் இஸ்ரேல் படையினர் தாக்குதல் – 13 பேர் பலி

சிரியாவில் இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்.சிரியாவில் அதிபர் அல் ஆசாத் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு கவிழ்ந்தது. இதையடுத்து அந்நாட்டின் அதிபராக அகமது அல் ஷரா பொறுப்பேற்றார்.

ஆசாத் ஆட்சி கவிழ்ந்தபோது சிரியாவில் ஐ.நா. கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், சிரியாவில் ரைப் டிமாஷ்கியு மாகாணம் குவாண்டனா மாவட்டம் பெட் ஜின் கிராமத்தில் இன்று இஸ்ரேல் படையினருக்கும், உள்ளூர் ஆயுதக்குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் பொதுமக்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் படையினர் 6 பேர் காயமடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here