ராஞ்சி, இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி தரப்பில் விராட் கோலி சிறப்பாக ஆடி ரன் குவித்தார். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை திறம்பட சமாளித்த அவர் சதம் விளாசி அசத்தினார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது
இதற்கு முன்னர் சச்சின் தெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்கள் அடித்திருந்ததே ஒரு வடிவத்தில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச சதங்களாக இருந்தது. தற்போது அதனை முந்தியுள்ள விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 52 சதங்களுடன் புதிய வரலாறு படைத்துள்ளார்.









