அர்ஜுன்.. ஜெருசலேம் மாஸ்டர்ஸ் சாம்பியன் ஆனார்!

ஜெருசலேம்: ஜெருசலேம் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில், இந்தியாவின் செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்தி, இளம் வீரர் அர்ஜுன் எரிகைசி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். சமீபத்தில் நடந்த உலகக்கோப்பையில் ஏமாற்றமடைந்த அர்ஜுனுக்கு, இந்த வெற்றி மிகப்பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.
இஸ்ரேலில் நடைபெற்ற இந்தத் தொடர் முழுவதும் இந்திய வீரர்களின் ஆதிக்கமே இருந்தது. இறுதிப்போட்டி ஒரு “ஆல்-இந்தியன் ஃபைனலாக” அமைந்தது. அதாவது இறுதிப் போட்டியில் மோதிய இருவருமே இந்திய வீரர்களான விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் அர்ஜுன் எரிகைசி.
குருவும் சிஷ்யனும் மோதியது போல அமைந்த இந்த இறுதிப்போட்டி அவ்வளவு எளிதாக முடிந்துவிடவில்லை. முதல் இரண்டு ‘ரேபிட்’ சுற்றுகளும் டிராவில் முடிந்தன. இரு வீரர்களும் மாறி மாறி சில தவறுகளைச் செய்தாலும், வெற்றியை விட்டுக்கொடுக்கவில்லை. இதனால் வெற்றியாளரைத் தீர்மானிக்க ‘டை-பிரேக்கர்’ (Tie-breaker) முறை கடைபிடிக்கப்பட்டது.
முதல் ‘பிளிட்ஸ்’ (Blitz) ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன் எரிகைசி, 45 நகர்வுகளில் ஆனந்தை வீழ்த்தி வெற்றிக்கனியைப் பறித்தார். இந்த வெற்றியின் மூலம் அர்ஜுன் எரிகைசிக்கு 55,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.46 லட்சம்) பரிசாகக் கிடைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here