மலேசியா–தாய்லாந்து: TVET துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த முயற்சி

பாங்காக்:

மலேசியாவும் தாய்லாந்தும், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் திட்டங்களை ஆராய்ந்து வருகின்றன.

குறிப்பாக விவசாயத் துறையில் TVET கூட்டணி, வேலைவாய்ப்புகளை உயர்த்தவும், மனித மூலதன மேம்பாட்டை வலுப்படுத்தவும் உதவும் என்று, துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

அவர் இன்று தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுலை சந்தித்த பிறகு, உற்பத்தி, டிஜிட்டல் தொழில்நுட்பம், மாணவர்–விரிவுரையாளர் பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளிலும் TVET பயிற்சிக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்தார். கிராமப்புற இளைஞர்களை 4IR-க்கு பொருத்தமாகப் பயிற்றுவிப்பதில் TVET முக்கியம் எனவும் அவர் கூறினார்.

ஜாஹிட் மேலும், ‘பயிற்சியாளர்களுக்கான பயிற்சி’ போன்ற முன்னோடித் திட்டங்கள் இரு நாடுகளுக்கிடையேயான TVET ஒத்துழைப்பின் தொடக்கமாக இருக்கும் எனவும் தெரிவித்தார். அதேசமயம், முதலீடு மற்றும் கூட்டு ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளிட்ட ஹலால் துறையிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்த இரண்டு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

2024 இல் தாய்லாந்து மலேசியாவின் ஏழாவது பெரிய உலக வர்த்தக பங்காளியும், ஆசியானில் மூன்றாவது பெரிய பங்காளியும் ஆக இருந்தது. 2025 ஜனவரி–அக்டோபர் காலத்தில் இருதரப்பு வர்த்தகம் RM98.19 பில்லியனை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here