பல்நோக்கி வாகனம் மோதி உயிரிழந்த 5 வயது சிறுவன்

அலோர் காஜா, ஜாலான் பாயா மெங்குவாங்கன் பகுதியில் சாலையை  கடக்கும்போது, ​​பல்நோக்கு வாகனம் (MPV) மோதி நேற்று  ஐந்து வயது சிறுவன் உயிரிழந்தான். அலோர் காஜா காவல்துறைத் தலைவர் அகமது அபு பக்கர் கூறுகையில், மாலை 5.09 மணியளவில் குழந்தை குடியிருப்புப் பகுதியிலிருந்து சாலையின் எதிர் பக்கத்திற்குச் செல்லும்போது டொயோட்டா அவன்சா மோதியதில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

64 வயது முதியவர் ஓட்டிச் சென்ற MPV, பாயா மெங்குவாங்கிலிருந்து மஸ்ஜித் தானாவை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக அவர் கூறினார். குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மஸ்ஜித் தானா சுகாதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தபோது சிறுவன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here