ஜோகூர் பாரு வணிக வளாகத்தில் மோதல்: 4 சிங்கப்பூர்வாசிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு!

ஜோகூர் பாரு, டிசம்பர் 24:

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோகூர் பாருவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நிகழ்ந்த மோதல் சம்பவத்தில் தொடர்புடைய நான்கு சிங்கப்பூர் பிரஜைகள் இன்று மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சுவா சின் ஹெங் (Chua Chin Heng, 56)லோ சோ பெங் (Loe Sou Peng, 55)ஆக்சல் சுவா கை ஜுன் (Axl Chua Kai Jun, 27) – மற்றும் பி. சுரேஷ் (P. Suresh, 46) – ஒரு கலைஞர் (Artist). ஆகியோர் அடங்குவர்.

கடந்த டிசம்பர் 21, மாலை 5:17 மணியளவில், ஜாலான் செரிகாலாவில் (Jalan Serigala) உள்ள ஒரு வணிக வளாகத்தில், மூன்று குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து சுரேஷைத் தாக்கியதாகவும், சுரேஷ் பதிலுக்குச் சுவா சின் ஹெங்கைத் தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இவர்கள் அனைவரும் தண்டனைச் சட்டம் பிரிவு 323 (வேண்டுமென்றே காயம் விளைவித்தல்) கீழ் குற்றம் சாட்டப்பட்டனர். இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு வரை சிறை அல்லது 2,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சுவா குடும்பத்தினர் (3 பேர்)குற்றச்சாட்டை மறுத்து விசாரணையைத் கோரினர். அவர்கள் மூவரும் தலா 5,000 ரிங்கிட் பிணையுடன் ஒரு மலேசிய நபர் பிணையில் விடுவிக்கப் பட்டனர். அதேநேரம் .பி. சுரேஷ் தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதனால் அவருக்கு 1,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது ,

அது தவிர வணிக வளாக மோதலைத் தொடர்ந்து, அன்று மாலை 6:15 மணியளவில் லார்கின் (Larkin) காவல் நிலைய வளாகத்திலும் சுவா சின் ஹெங் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதற்காக அவர்கள் மீது காவல்துறைச் சட்டம் பிரிவு 90 (ஒழுங்கற்ற நடத்தை) கீழ் கூடுதல் வழக்குத் தொடரப்பட்டது.

இக்குற்றச்சாட்டைச் சுரேஷ் ஒப்புக்கொண்டார், அவருக்கு 400 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.சுவா சின் ஹெங் இக்குற்றச்சாட்டை மறுத்ததால், அவருக்குக் கூடுதல் 4,000 ரிங்கிட் பிணைத் தொகை நிர்ணயிக்கப்பட்டது.மாஜிஸ்ட்ரேட் ஏ. ஷார்மினி, குடும்ப உறுப்பினர்களின் வழக்கைத் தொடர வரும் ஜனவரி 27, 2026 அன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here