எரிபொருள் விலையில் ஜனவரி 1 – 7 வரை மாற்றமில்லை – நிதியமைச்சு அறிவிப்பு!

கோலாலம்பூர்:

புத்தாண்டு பிறக்கும் வேளையில், வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் எரிபொருட்களின் விலையில் மாற்றங்கள் ஏதுமின்றி பழைய விலையே தொடரும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

எரிபொருளின் சில்லறை விலை (RM)RON95 (மானியம் இல்லாதது)RM 2.56க்கும், RON95 (BUDI95 மானியத்தின் கீழ்)RM 1.99-க்கும், RON97 பெட்ரோல் RM 3.16-க்கும், டீசல் (தீபகற்ப மலேசியா)RM 2.94, டீசல் (சபா, சரவாக் & லபுவான்)RM 2.15-க்கும் விற்கப்படுகிறது.

உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையின் விலை மாற்றங்களைக் கண்காணித்து வரும் அதே வேளையில், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு எரிபொருள் விலையை நிலையாக வைத்திருக்க அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று நிதியமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த விலைப்பட்டியல் 2026 ஜனவரி 1 (வியாழக்கிழமை) முதல் ஜனவரி 7 (புதன்கிழமை) வரை அமலில் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here