ஈப்போ அருணகிரிநாதர் மன்றத்தின் ஏற்பாட்டில் அருணகிரிநாதர் விழா 2026: விமரிசையாக நடந்தேறியது

நாடு தழுவிய நிலையில் அருணகிரிநாதர் விழா கொண்டாடப்பட்ட நிலையில் இவ்வாண்டு 17ஆவது ஆண்டாக ஈப்போ அருணகிரிநாதர் மன்றத்தின் ஏற்பாட்டில் 2026 ம் ஆண்டிற்கான அருணகிரிநாதர் விழா லாகாட் அருள்மிகு தண்டாயுதபாணி ஆலய மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.

கடந்த 17 வருடமாக இந்த அருணகிரிநாதர் விழா கொண்டாடப்பட்டு வருவதாகவும் இளம் தலைமுறையினர் மத்தியில் அருணகிரிநாதர் அருளிய முருகப்பெருமானின் புகழை அறிந்துக்கொள்ளும் நோக்கில் இந்த விழா நடத்திவருவதாக என மலேசிய முருகபக்தி பேரவையின் தேசியத் தலைவரும், ஈப்போ அருணகிரிநாதர் மன்றத் தலைவருமான மகப்பேறு பேராசிரியர் டாக்டர் வ.ஜெயபாலன் தெரிவித்தார்.

இம்முறை மலேசியாவில் இம்மாதம் 25 ல் தொடங்கி ஜனவரி 3 வரை பல்வேறு நகரங்களில் அருணகிரிநாதர் விழா கொண்டாடப்பட்டது. அருணகிரிநாதர் பற்றிய புகழ் மக்கள் மத்தியில் பரவி வருவது வரவேற்க்கதக்கது எனவும் இந்நிகழ்வில் மேலும் சிறப்பு சேர்க்கும் அங்கமாக  இந்நாளில் வேல் பூஜை நடைபெற்றுயுள்ளதாக எனவும் இந்நிகழ்வில் தலைமைதாங்க சீர் வளர் சீர் நாராயண ஞான தேசிக சுவாமிகள், நிகழ்வில் முன்னிலையில் நடைபெற்றது எனவும் அவர் கூறினார்.

இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட மகிமா இயக்க தலைவர் டத்தோ சிவகுமார் நடராஜா பரிந்துரைக்கு ஏற்ப அடுத்தாண்டு தேசிய அளவில் அருணகிரிநாதர் விழா கொண்டாட உத்தேசித்துள்ளதாக அவர் சொன்னார். இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுகும் பேராசிரியர் டாக்டர் வ. ஜெயபாலன் நன்றி தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்விற்கு முன்னதாக டிசம்பர் 26 முதல் 31வரை ஐந்து நாட்களுக்கு விடுமுறைக்கால “அமுதம்” சமய பண்பாட்டு வகுப்புகள் வழக்கம் போல 10 வது ஆண்டாக இவ்வாண்டும் நடைபெற்ற இந்நிகழ்வில் சுமார் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பொற்கிழிக்கவிஞர் பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம் ஐயா தலைமையில் பாடத்திட்டத்தின் அடிப்படையில்  நடைபெற்ற வகுப்பில் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.

அருணகிரிநாதர்  விழாவில் மேலும் சிறப்புசேர்க்கும் விதமாக சிறப்பு பிரமுகர்களின் திருப்புகழ் சொற்பொழிவுகள், இசை வழிபாடு, திருப்புகழ் நாட்டிய நாடகங்கள் என்று முத்தமிழும், முருக பக்தியும் சங்கமிக்கும் ஆன்மீக பெருவிழாவாக அமைந்தது என்பது குறிப்பிடதக்கது. இந்நிகழ்வில் பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் ,தொழிலதிபர் அமுசு.ஏகாம்பரம்,ஆகியோர் உட்பட திரளானோர் கலந்துக்கொண்டனர்.

-எஸ். லிங்கேஸ்வரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here