வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 543 பேர் தற்போது மூன்று மாநிலங்களில் உள்ள தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர். ஜோகூரில் இன்று காலை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுங்கை மூவார் உட்பட செகாமட்டில் உள்ள இரண்டு ஆறுகள் ஆபத்தான அளவைத் தாண்டிவிட்டன.
சரவாக்கில் நேற்று பிற்பகல் 380 ஆக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 348 ஆக குறைந்துள்ளது. சரவாக்கின் பல பகுதிகளுக்கு ஜனவரி 3ஆம் தேதி வரை தொடர் மழை எச்சரிக்கையை மலேசிய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ஜாசினில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆக உள்ளது.










