கிள்ளான்:
சாலையில் இரு வாகன ஓட்டிகள் மோதிக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அதில் சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்திய வடக்கு கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர், உதவி ஆணையர் எஸ். விஜய ராவ், சண்டைக்கான உண்மையான காரணம் குறித்து இன்னும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
இந்த வழக்கு, அபாயகரமான ஆயுதங்கள் அல்லது வழிகளைப் பயன்படுத்தித் தாக்கியதற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 324-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.
சமூக வலைதளத்தில் (X தளம்) பகிரப்பட்ட 30 வினாடி வீடியோவின்படி, இந்தச் சம்பவம் கிள்ளான், ஜாலான் கெரெதாபி லாமா (Jalan Keretapi Lama) பகுதியில் நடந்துள்ளது.
வாகனத்தின் டேஷ்கேமில் (Dashcam) பதிவான அந்த வீடியோவில், இரு நபர்களும் சாலையின் நடுவில் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வதும், இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்ததும் அந்த வீடுயோவில் பதிவாகியுள்ளது.
இது மற்ற வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.





















