கோலாலம்பூர்:
நாடு முழுவதும், குறிப்பாக தீபகற்ப மலேசியாவின் வடக்கு பகுதிகளில் வரும் ஜனவரி 25-ஆம் தேதி வரை வறண்ட மற்றும் வெப்பமான வானிலை நிலவும் என்று மெட்மலேசியா (MetMalaysia) கணித்துள்ளது.
இந்தக் காலக்கட்டத்தில் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும், பொதுவான வறண்ட வானிலை நிலவினாலும், தீபகற்பத்தின் மேற்குப் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் குறுகிய காலத்திற்கு பலத்த காற்றுடன் கூடிய இடிமின்னல் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அது தெரிவித்துள்ளது.
கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் குறித்த எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது: இது மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும், 3.5 மீட்டர் உயரத்திற்கு அலைகளும் எழக்கூடும். இது சிறு படகுகள் மற்றும் கடல் விளையாட்டுகளுக்கு ஆபத்தானது என்றும், மற்றும் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதுடன், அலைகள் 4.5 மீட்டருக்கும் அதிகமாக உயரக்கூடும். இது மீன்பிடி படகுகள் மற்றும் படகுச் (Ferry) சேவைகளுக்கு மிகவும் ஆபத்தானது என்றும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வெப்பமான வானிலை நிலவுவதால் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், காய்ந்த புல்வெளிகள் மற்றும் காலி இடங்களில் தீ வைப்பதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தற்போதைய தகவல்களுக்கு myCuaca செயலி அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம்.





















