பத்துமலை ஆலயத்திற்கு எப்பொழுதும் மடானி அரசாங்கம் ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருந்து வருகிறது பத்துமலை ஆலயத் தலைவர் டான்ஶ்ரீ நடராஜா தெரிவித்தார். அண்மையில் ஆலயத்திற்கு மின் படிகட்டுகள் தொடர்பில் தனக்கும் பாப்பாராயுடுவிற்கு சிறிய மனகசப்பு ஏற்பட்டதாகவும் அதனால் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடுப்பதாக கூறியிருந்தது அந்த நேரத்தில் எனக்குள் ஏற்பட்ட கோபம்தான் என்றும் அவர் மீது தனக்கு தனிப்பட்ட வெறுப்போ கோபமோ இல்லை என்று விளக்கமளித்தார்.
பிரதமர் அன்வார் ஆட்சியின் கீழ் இயங்கி வரும் மடானி அரசாங்கம் குறிப்பாக டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ சென்ற வருடம் தைப்பூச திருவிழாவிற்கு ஒரு மில்லியன் ரிங்கிட் நிதியுதவியை பெற்று தந்தார். இந்தாண்டும் பெற்று தருவதாக கூறியிருக்கிறார். அதே போல் சிலாங்கூர் அரசாங்கமும் ஆலயத்திற்கு உறுதுணையாக இருந்திருக்கிறது. பத்துமலை ஆலயம் 1930ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சட்டத் திட்டங்களுக்கு கீழ் இயங்கி வருவதால் ஆலயத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு சட்டத்துறைத் தலைவரிடமோ அல்லது நீதிமன்றத்திலோ தீர்த்து கொள்ள முடியும் என்பதால் நாங்கள் நீதிமன்றம் சென்றிருக்கிறோம். வரும் 21ஆம் தேதி வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது என்றார்.
டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இரு தரப்பினர் சமரசமாக தீர்த்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். பத்துமலை ஆலயம் – சிலாங்கூர் அரசாங்கம் இரண்டுமே தங்கள் வாதத்தை முன் வைக்கிறது. ஆனால் தற்பொழுது வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் ஒரு உடன்பாடு ஏற்படும் என நம்புவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய பாப்பாராயுடு சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு மடானி அரசாங்கம் இயங்கி வருவதாகவும் அதனால் மேம்பாட்டு பணிகளுக்கான தஸ்தாவேஸ்கள் (ஆவணங்கள்) சரியாக இருந்தால் நிச்சயம் எங்களின் முழு ஆதரவையும் வழங்குவோம் என்றார்.









