பிரதமர் மோடியுடன் பிரேசில் அதிபர் பேச்சுவார்த்தை

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில். அந்நாட்டின் அதிபர் பிரேசில் அதிபர் லுலா டி சில்வா. இந்நிலையில், பிரேசில் அதிபர் டி சில்வா நேற்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இந்த பேச்சுவார்த்தையின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், சர்வதேச அரசியல் சூழ்நிலை உள்பட பவ்லேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர்.

பிரேசில் அதிபர் டி சில்வா உடன் பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், அதிபர் டி சில்வா உடன் பேசியது மகிழ்ச்சியளிக்கிறது. இருநாட்டு உறவில் இந்த ஆண்டு புதிய உச்சம் அடைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். பிரேசில் அதிபர் டி சில்வா விரைவில் இந்தியா வர உள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here