அகில் சத்யன் இயக்கத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி நடித்த ‘சர்வம் மாயா’ படம் கடந்த மாதம் 25-ம் தேதி வெளியானது. இந்த படத்தில், ரியா ஷிபு, பிரீத்தி முகுந்தன், ஜனார்தனன், ரகுநாத் பலேரி மற்றும் அஜு வர்கீஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படம் ரூ.150 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளது. தியேட்டர்களில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ஓடிடி ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், ‘சர்வம் மாயா’ படம் வருகிற 30ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது.

























