பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் – 41 பயங்கரவாதிகள் பலி

லாகூர்,பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது பாதுகாப்புப்படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

குறிப்பாக, ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கைபர் பக்துவா மாகாணத்தில் தெஹ்ரிக் இ தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான்களின் கிளை அமைப்பாகும். அதேவேளை, இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் ஹர்னாய் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து பாதுகாப்புப்படையினரும் பதிலடி துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதிகள் 30 பேர் கொல்லப்பட்டனர்.

அதேபோல், பலூசிஸ்தானின் பஞ்ச்கர் மாவட்டத்திலும் பாதுகாப்புப்படையினர் இன்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதையடுத்து பாதுகாப்புப்படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 11 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதன் மூலம் பாகிஸ்தானில் இன்று இருவேறு இடங்களில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் மொத்தம் 41 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here