கோலாலம்பூர்:
சிலாங்கூர், தஞ்சோங் சிப்பாட் (Tanjong Sepat) பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் சிறந்த நிர்வாகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், இதுவரை 80-க்கும் மேற்பட்ட பன்றிப் பண்ணைகள் மூடப்பட்டுள்ளன.
கோலா லங்காட் பகுதியில் முன்பு 115 பண்ணைகள் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 30-க்கும் குறைவாகக் குறைந்துள்ளது.
பண்ணைகளை மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நிலையான முறையில் நிர்வகிப்பதற்கான மாநில அரசின் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது பண்ணைகளை முழுமையாக அழிப்பதற்கான நடவடிக்கை அல்ல, மாறாக முறையான இடங்களுக்கு இடமாற்றம் செய்யும் செயல்முறையாகும்.
பண்ணைகளில் உள்ள குட்டிப் பன்றிகள் வளர்வதற்கு நேரம் தேவைப்படுவதால், இடமாற்றம் செய்ய விவசாயிகளுக்குப் போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து சமூகத்தினர் மற்றும் சீனச் சங்கங்களுடன் விரைவில் ஒரு கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்படும்.
தற்போது ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் (African Swine Fever – ASF) மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது மனிதர்களுக்குப் பரவாது. நிபா வைரஸ் (Nipah Virus) தற்போது புழக்கத்தில் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்




















