பினாங்கு பள்ளி உணவகத்தில் நச்சு உணவு: 12 மாணவர்கள் பாதிப்பு – உணவகம் மூட உத்தரவு!

கெப்பாலா பாத்தாஸ், ஜனவரி 31:

கடந்த ஜனவரி 23-ஆம் தேதி, பள்ளி உணவகத்தில் வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட 4-ஆம் ஆண்டு முதல் 6-ஆம் ஆண்டு வரையிலான 12 மாணவர்கள் வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டனர்.

உணவு நஞ்சாகியதால் 12 மாணவர்கள், வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, தலைவலி மற்றும் காய்ச்சல் ஆகிய அறிகுறிகளை அனுபவித்தனர்.

மொத்தம் 604 மாணவர்கள் அந்த உணவால் பாதிக்கப்படக்கூடிய சூழலில் இருந்தனர் (Exposed), ஆனால் 1.98 சதவீத மாணவர்கள் மட்டுமே அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செபெராங் பிறை உத்தாரா மாவட்ட சுகாதார அலுவலகம் நடத்திய முதற்கட்ட ஆய்வில் பின்வரும் தகவல்கள் தெரியவந்துள்ளன:

உணவில் ஸ்டேஃபிலோகோகஸ் ஆரியஸ் (Staphylococcus aureus) எனும் பாக்டீரியா நச்சு இருந்தது கண்டறியப்பட்டது.

‘மாவில்தோய்த்து பொரிக்கப்பட்ட கோழி’ (Battered Fried Chicken) மூலமே இந்த நச்சு பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் உணவகத்தில் முறையான தூய்மை இல்லை . அங்கு கரையான்கள் மற்றும் கரப்பான் பூச்சிகள் இருப்பதும் சோதனையில் உறுதி செய்யப்பட்டது.

புதிய டெண்டர் காரணமாக அனுபவமற்ற ஊழியர்கள் பணியாற்றியது மற்றும் கோழி சரியாக வேகவைக்கப்படாதது (Undercooked food) போன்றவையும் முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

1988-ஆம் ஆண்டு தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ், ஜனவரி 23 முதல் பள்ளி உணவகத்தின் சமையலறையை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்பார்வை: உணவக உரிமையாளருக்குத் தூய்மைப்படுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மாணவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பினாங்கு கல்வி இலாகா இயக்குனர் முகமட் ஜியாவுதீன் மாட் சாட் கூறுகையில், “மாணவர்களின் ஆரோக்கியமே எங்களது முதல் முன்னுரிமை. பள்ளி உணவகங்கள் சுகாதார விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுவதை உறுதி செய்வோம்,” எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here