திருச்செந்தூர் முருகன் அருளுடன் மலாக்கா பத்து பிரண்டாம் , ஸ்ரீ சுப்பிரமணியர் தேவஸ்தானத்தில் தைப்பூசம் விழா

( ரெ.மாவினி)

மலாக்கா ,பத்து பிரண்டாம் ஸ்ரீ சுப்பிரமணியர் தேவஸ்தானத்தில் திருச்செந்தூர் முருகன் அருளுடன் தைப்பூசத் திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது.

சுமார் ஐநூற்றுக்கு மேற்பட்ட பால்குடங்கள் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட காவடிகளை ஏந்தி பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை பாச்சாங் ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் ஆலயத்திலிருந்து காலை 10.00 மணிக்கு பாதயாத்திரையாக மேற்கொண்டு ஆலயத்துக்கு வந்தடைந்தனர்.

ஆலயத் தலைவர் வ.மனோகரன் கந்தனின் வேல் ஏந்தி நாதஸ்வர மேள தாளங்கள் முழங்க பக்தர்களின் முன்னிலையில் நடந்து வந்தார்.

இந்த தைப்பூசக் கொண்டாட்டம் மனநேரியுடனும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் காணப்பட்டனர். திருச்செந்தூர் முருகன் என்ற அழைக்கப்படும் பத்து பிரண்டாம் ஸ்ரீ சுப்பிரமணியர் சகல அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் காட்சி தந்தார்.

நாளை திங்கட்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு அழகிய இரதத்தில் செந்தில் நாயகன் மலாக்கா நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள ஆசி வழங்குவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here