30 ஆண்டுகளாக உறுப்பினராக இருக்கும் கெபிமா பெர்மிம்மில் இருந்து ஒதுக்கப்படுகிறதா?

இந்திய முஸ்லீம்களின் அரசு சாரா இயக்கத்தின் மிகப் பெரிய பேரவையாக இருக்கும் பெர்மிமில் இருந்து மலேசிய இந்திய முஸ்லீம் இளைஞர், மகளிர் இயக்கம்  (கெபிமா) ஒதுக்கப்படுகிறதா என்று கெபிமா ஆலோசகர் முகமது காதிர் அலி கேள்வி எழுப்பினார்.

சில ஆண்டுகளுக்கு ஏற்பட்ட தலைமை மாற்றத்திற்கு பிறகு அப்பேரவைக்கு வழங்கிய சில ஆலோசனைகள் ஏற்க மறுத்ததாகவும் குறிப்பாக அரசு சாரா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே உறுப்பினர்களாகவும் அதே வேளை தலைமைத்துவ பதவி வகிக்க வேண்டும் என்றும் அதே வேளை ஒரு அமைப்பின் தலைவர் வர முடியாத நிலையில் பிரதிநிதியை அனுப்பினால் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது குறித்து சில ஆலோசனைகளை வழங்கினோம்.

ஆனால் எங்கள் ஆலோசனைகளை ஏற்று கொள்ளாததோடு எங்கள் இயக்கம் நீக்கப்பட்டதாக கடிதம் அனுப்பப்பட்டது. அதனால் நாங்கள் தேசிய பதிவிலாகாவின் ஆலோசனையை நாடினோம். தேசிய பதிவிலாகா பல விசாரணைகளுக்குப் பிறகு பெர்மிமிற்கு ஒரு கண்டன கடிதம் அனுப்பபட்டிருக்கிறது.

வரும் பிப்ரவரி 8ஆம் தேதி பெர்மிமின் தேர்தல் நடைபெறவிருக்கும்  வேளையில் தேசிய பதிவிலாகாவின் கடிதத்திற்கு பெர்மிம் எந்தளவிற்கு முக்கியத்துவம் வழங்குகிறது என்றும்  30 ஆண்டுகளாக பெர்மிமில் அங்கம் வகிக்கும் கெபிமாவை ஏன் ஒதுக்கிறது என்பது தனக்கு தெரியவில்லை என்றும் முகமது காதிர் அலி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here