கோலாலம்பூர்:
காஜாங்கில் உள்ள சுங்கை ராமல் பாரு (Sungai Ramal Baru) பகுதியில் இன்று காலை இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.
இன்று காலை 7:50 மணியளவில் மூன்று சிறுவர்களும் மயக்க நிலையில் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர். அவர்களில் 11 வயது அண்ணன் உயிரிழந்தார். அவரது 5 மற்றும் 9 வயதுடைய இரு தம்பிகள் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களது 35 வயது தாய், சிறுவர்களுக்கு மெதடோன் (Methadone) மருந்தை கொடுத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மெதடோன் என்பது, இது பொதுவாக போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு (ஹீரோயின், மார்பின் போன்றவை) சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு செயற்கை ஓபியாய்டு (Opioid) மருந்தாகும்.
மருத்துவமனை அளித்த தகவலின்படி,
5 வயது சிறுவன் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் (ICU), மற்றொரு சிறுவன் அவசர சிகிச்சைப் பிரிவின் சிவப்பு மண்டலத்திலும் (Red Zone) சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காலை 9:01 மணியளவில் மருத்துவமனை அதிகாரிகளிடமிருந்து போலீசாருக்குப் புகார் கிடைத்துள்ளது. அந்தப் பெண்மணிக்கு இந்த மருந்து எப்படி கிடைத்தது மற்றும் எதற்காக அவர் தனது குழந்தைகளுக்கு இதைக் கொடுத்தார் என்ற நோக்கம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த சிறுவனின் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காகவும் போலீசார் காத்திருக்கின்றனர்.





















