(ரெ.மாலினி)
மலாக்கா,பிப் 12-
மலாக்கா ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) இரண்டு போலீஸ் அதிகாரிகளை லஞ்சம் கேட்டும், பெற்றும் இருப்பதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்து ரிமாண்ட் செய்துள்ளது.
சுமார் 2,000. வெள்ளி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் இந்த இரு ஆண் போலீஸ் அதிகாரிகள் (30 மற்றும் 40 வயது) மீது, போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் பெற்றதாக குற்றச்சாட்டு உள்ளது.
மலாக்கா மஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று காலை, பிப்ரவரி 16, 2026 வரை 6 நாட்கள் ரிமாண்ட் உத்தரவு வழங்கியுள்ளது.
இந்த சம்பவம் ஜனவரி 5 அன்று ஆயேர்குரோ ஓய்வு மற்றும் உணவகம் (R&R) பகுதியில் நடைபெற்றதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
2009 ஆம் ஆண்டு SPRM சட்டத்தின் பிரிவு 16(a)(B) கீழ் விசாரணை செய்யப்படுகிறது.























