கோலாலம்பூர்:
மலேசிய வாழ் முஸ்லிம்கள் நோன்பு நோற்பதற்கான தொடக்க நாளைத் தீர்மானிக்க, வரும் பிப்ரவரி 17 (செவ்வாய்க்கிழமை) அன்று மாலை பிறை பார்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் 271-வது ஆட்சியாளர் மாநாட்டின் (Conference of Rulers) முடிவின்படி, ரமலான் மாதத்தின் தொடக்கம் ‘ருக்யா’ (நேரடி பார்வை) மற்றும் ‘ஹிசாப்’ (வானியல் கணக்கீடு) ஆகிய இரண்டு முறைகளையும் பின்பற்றித் தீர்மானிக்கப்படும்.
பிறை பார்த்த பின்னர், பிப்ரவரி 17-ஆம் தேதி இரவு, வானொலி மற்றும் தொலைக்காட்சி வாயிலாக மாமன்னர்களின் முத்திரைக்காப்பாளர் ரமலான் தொடக்க நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.
நாடு முழுவதும் மொத்தம் 29 இடங்களில் பிறை பார்க்கும் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
ரமலான் மாதத்தின் தொடக்கத்தை முன்னிட்டு, போக்குவரத்து மற்றும் விமானச் சேவைகள் ஏற்கனவே சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.





















