பறவைக் காய்ச்சல்: ஜப்பானில் கோழி புதைக்க இடம் இல்லை ..!

தோக்­கியோ:

இது­வரை காணப்­படாத அள­வில் மோச­மான பற­வைக் காய்ச்­சல் பர­வலை ஜப்பான் எதிர்­நோக்கி வரு­கிறது. அங்கு பண்­ணை­களில் வளர்க்­கப்­படும் பறவை­கள், முட்­டை­கள் ஆகி­ய­வற்­றின் விலை கணி­ச­மாக அதி­க­ரித்­துள்­ளது.

ஜப்­பா­னில் சென்ற ஆண்டு அக்­டோ­பர் மாதம் பற­வைக் காய்ச்­சல் பர­வல்  தொடங்­கி­யது. அதி­லி­ருந்து இது­வரை 17 மில்­லியனுக்­கும் அதி­க­மான பற­வை­கள் கொல்­லப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லை­யில், அந்­நாட்­டில் மாண்ட கோழி­க­ளைப் புதைக்க இப்­போது போதுமான இடம் இல்லை என்று கூறப்படுகிறது. பற­வைக் காய்ச்­சல் கிருமி பரவா­ம­லும் தண்­ணீரை அசுத்­தப்­ப­டுத்­தா­ம­லும் பார்த்­துக்­கொள்ள மாண்ட பறவை­க­ளின் உடல்­களை சரியா­கப் புதைக்­க­வேண்­டும்.

கோழி­க­ளை புதைப்­ப­தற்கு உகந்த நிலங்­கள் போதுமான அளவில் இல்லை என்று உள்­ளூர் அரசியல் தலைவர்களும் விவசாயிகளும் என்­ஹெச்கே ஊட­கத்­தி­டம் தெரி­வித்­தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here