விமானத்தில் பயங்கர கைகலப்பு: பாதியில் தரையிறங்கிய விமானம் – பயணிகளுக்கு வாழ்நாள் தடை!

லண்டன்:

துருக்கியின் அன்டால்யாவிலிருந்து (Antalya) பிரிட்டனின் மான்செஸ்டர் நகருக்குச் சென்று கொண்டிருந்த ஜெட்2 விமானத்தில், இரண்டு பயணிகளுக்கு இடையே திடீரெனக் கைகலப்பு ஏற்பட்டது.

விமானம் புறப்பட்டு சுமார் 3 மணி நேரத்திற்குப் பிறகு இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. அன்டால்யாவிலிருந்து மான்செஸ்டர் செல்ல மொத்தம் 5 மணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 பயணிகளின் பாதுகாப்பைக் கருதி, விமானி உடனடியாக விமானத்தைப் பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் (Brussels) விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கினார்.

சண்டையில் ஈடுபட்ட அந்த இரண்டு பயணிகளும் உடனடியாக விமானத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.

விமானப் போக்குவரத்து விதிகளுக்குப் புறம்பாக நடந்துகொண்ட அந்த இருவருக்கும், இனிவரும் காலங்களில் ஜெட்2 நிறுவனத்தின் எந்தவொரு விமானத்திலும் பயணம் செய்ய வாழ்நாள் தடை (Lifetime Ban) விதிக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் உள்ளே பயணிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்தச் சம்பவத்தால் மற்ற பயணிகள் பெரும் அதிர்ச்சிக்கும் சிரமத்திற்கும் உள்ளாகினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here