அமெரிக்காவில் ஹாக்கி விளையாட்டின் போது துப்பாக்கி சூடு: 3 பேர் பலியான சோகம்

அமெரிக்காவின் ரோட் தீவு மாகாணத்தில் இளைஞர்கள் சிலர் ஹாக்கி விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நபர் திடீரென சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார் இதில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் காயமடைந்த 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சொந்த பிரச்சினை காரணமாக நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் மற்றும் உயிரிழந்தவர்களின் விவரங்களை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாசாரம் மக்களை கவலை அடைய வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here