பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 18, 2026:
புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு அனைத்து மின்சார ரயில் சேவை (ETS) வழித்தடங்களுக்கும் 30% தள்ளுபடி வழங்குவதாக மலேசிய ரயில்வே நிறுவனம் (KTMB) அறிவித்துள்ளது.
இந்தத் தள்ளுபடி சலுகை இன்று பிப்ரவரி 18, புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.
பயணிகள் ‘NURRAMADAN’ அல்லது ‘RAMADANTIBA’ ஆகிய Promo Code குறியீடுகளைப் பயன்படுத்தி இந்தத் தள்ளுபடியைப் பெறலாம்.
KTMB இணையதளம், KITS மொபைல் செயலி அல்லது இரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி இயந்திரங்கள் மூலம் டிக்கெட்டுகளை வாங்கலாம் என்றும் அது அறிவித்துள்ளது.
முன்னதாக சீனப் புத்தாண்டுக்காக வழங்கப்பட்ட 20% தள்ளுபடி சலுகையைத் தொடர்ந்து, தற்போது ரமலான் மாதத்திற்காக இந்த 30% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.





















