கோலாலம்பூர்:
பார்வையாளர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காகவும், புதிய நிர்வாகம் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளுவதற்காகவும் கோலாலம்பூர் டவர் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது.
உலகின் மிக உயரமான தொலைத்தொடர்பு கட்டமைப்புகளில் ஒன்றான இந்த Tower மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கும் தேதி பல்வேறு ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்படும் என்று தகவல் தொடர்பு அமைச்சகம் நேற்று இரவு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த அறிவிப்பு மூலமாக மடானி அரசாங்கம், தகவல் தொடர்பு அமைச்சகத்தின் மூலம், கோலாலம்பூர் கோபுரம் அரசாங்கத்திற்குச் சொந்தமானது என்பதை வலியுறுத்துகிறது.
“ஏப்ரல் 1, 2025 முதல், கோலாலம்பூர் கோபுரத்தின் செயல்பாடுகள், மேம்படுத்தல் மற்றும் பராமரிப்பு பணிக்காக LSH Service Master Sdn Bhd (LSHSM)நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது ,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, மார்ச் 31, 2025 க்குப் பிறகு Menara Kuala Lumpur Sdn Bhd (MKLSB) KL Tower வளாகத்தில் தொடர்ந்து தங்கியிருப்பது அங்கீகரிக்கப்படாது என்றும் அது கூறியது.




















