அருள்மிகு ஸ்ரீ பராசக்தி பச்சையம்மன் ஆலயத் திருவிழாவில் தொப்புள் கொடி உறவுகள் ஒன்று கூடினர்

கவின்மலர்

தைப்பிங், சிம்பாங் கம்போங் ஜூபோங் அற்றங்கரை அருகில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பராசக்தி பச்சையம்மன் தேவி ஆலய ஆண்டுத் திருவிழாவில் ஆலய தோற்றுநர்களில் ஒருவரான துரைசாமியின் தொப்புள் கொடி உறவுகளான நூற்றுக்கணக்கான உறவினர்கள் ஒன்று கூடியது மனதிற்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக துரைசாமியின் மகனான துரை.ஜெகநாதன் தெரிவித்தார்.

தமிழ் நாடு, வேலூர் காரணாம்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டார ஊர்களைச் சேர்ந்த மக்கள் இங்கு குடியேறிய காலம் முதல் அன்னை பச்சையம்மனை தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர்.சக்தியின் மறு உருவமே இந்த பச்சையம்மன்.

இவரை பெரும்பாலான இடங்களில் கிராம தேவதையாக இன்றளவும் மக்கள் வழிபட்டு வருகிறார்கள்.

இந்த பச்சை அம்மன் பல குடும்பங்களுக்கு குலதெய்வமாக விளங்கி அருள் பாளித்து வருகிறார். பச்சையம்மன் குறித்த பல புராண கதைகள் உள்ளன. பச்சையம்மன் சிவபெருமானின் உடலில் பாதியை பெற வேண்டும் என்பதற்காக இந்த கோலத்தில் சிவ பூஜை செய்ததாக சொல்லப்படுகிறது.

ஆலயத்தில் நடந்த சிறப்பு பூஜைகளிலும் யாகங்களிலும் ஜெ.துரைசாமியின் பரம்பரையைச் சேர்ந்த தொப்புள் கொடி உறவுகள் கெடா,பினாங்கு ஜோகூர்,சபா வரை நாடு முழுவதிலுமுள்ளவர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

துரைசாமியின் மகன் துரை.ஜெகநாதன் தலைமையில் தமது துணைவியாரின் தாத்தா துரைசாமியின் பரம்பரையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்கள் தங்களின் குடும்பத்துடன் கலந்துக் கொண்டது மன நிறைவளித்ததாக மலேசிய குற்றத்தடுப்பு அறவாரியத்தின் உச்சமன்ற உறுப்பினரும் பினாங்கு மாநிலத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ கா.புலவேந்திரன் தெரிவிததார்.

இத்திருவிழாவில் பொங்கல் வைக்கும் வைபவம் மிக முக்கிய அங்கமாக இடம் பெறுவதால் பக்தர்கள் குடும்ப உறுப்பினர்களுடன்பொங்கல் வைத்துப் படையலிட்டனர் என்று அவர் சொன்னார்.

முதல்நாள் வழிபாட்டில் சபா மாநில மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) இயக்குநர் டத்தோ எஸ்.கருணாநிதி உள்ளிட்ட அதிகமான உறவினர்கள் கலந்துக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here