37 வயதில் உயிரிழந்த சோகம் – பிரபல சின்னத்திரை நடிகை திடீர் மரணம்

கன்னட சின்னத்திரை உலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ரஷ்மி லீலா. காவ்யாஞ்சலி, ஆனந்த சாகர், பாந்தவ்யா போன்ற தொடர் மூலம் சின்னத்திரை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்து உள்ளார்.

சின்னத்திரையில் பல்வேறு கேரக்டரில் நடித்து வந்த ரஷ்மி லீலா கிராம தேவதே, சிகிமுத்து போன்ற படங்களிலும் நடித்து உள்ளார். ரஷ்மி லீலா கணவர் சரிக்குமஞ்சு கன்னட தொலைக்காட்சியில் எழுத்தாளராகவும், வசன கர்த்தாகவும் இருக்கிறார்.

புன்னகை நிறைந்த அழகாலும், நடிப்பாலும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையை அலங்கரித்து வந்த ரஷ்மி லீலா கடந்த 2019-ம் ஆண்டு முதல் நுரையீரல் பைப்ரோ சிஸ் என்ற நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார்

கடந்த சில ஆண்டுகளாக நோய் பாதிப்பினால் அவதிப்பட்டு வந்த ரஷ்மி லீலா மீண்டும் படப்பிடிப்புக்கு வருவேன் என்று தன்னம்பிக்கையுடன் இருந்தார். இந்நிலையில் 37 வயதான ரஷ்மி லீலா சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

இது குறித்து ரஷ்மி லீலா கணவர் சரிக்குமஞ்சு வெளியிட்டுள்ள பதிவில், என் மனைவி ரஷ்மி லீலா நுரையீரல் பைப்ரோசியுடன் சில ஆண்டுகளாக போராடினார். சமீபத்தில் அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. விரைவில் குணமடைந்து வருவார் என்ற நம்பிக்கையில் இருந்த போது உடல்நிலை மோசமடைந்து துரதிர்ஷ்டவசமாக நேற்று உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு இன்று பனசங்கரி மின் மயானத்தில் நடைபெறும் என பதிவிட்டுள்ளார்.

ரஷ்மி லீலா உடலுக்கு சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here