புத்தாண்டு கொண்டாட்டத்தில் துயரம் – 12 பேர் பலியான சோகம்

பீஜிங்,சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில், சந்திர புத்தாண்டு சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நாடு முழுதும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மக்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். சீன ஜோதிடத்தின்படி இது ‘குதிரை ஆண்டு’ தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்தக் கொண்டாட்டத்தின்போது தீய சக்திகளை விரட்டப் பட்டாசுகள் வெடிப்பது மரபாகும்

இந்நிலையில், சீனாவின் ஹுபேய் மாகாணத்தின் ஜியாங்யாங் நகரில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட வெடிவிபத்தால் 12 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here