பயனர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த வசதி: இன்ப அதிர்ச்சி கொடுத்த வாட்ஸ் அப்- என்ன தெரியுமா?

ஸ்மார்ட் போன் பயனர்கள் அனைவரும் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ் அப் உள்ளது. தற்போது உலக அளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக இருக்கக்கூடிய வாட்ஸ் அப், பயனர்களை கவர புதுப் புதுப் அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் வாட்ஸ் அப் பயனர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. இதன்படி, வாட்ஸ் அப் குழுக்களில் புதிதாக சேருபவர்கள், தாங்கள் இணைவதற்கு முன்பு பகிரப்பட்ட முந்தைய செய்திகளை பார்க்கும் புதிய வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் குழுவில் சேரும் புதிய நபர் கடந்த 24 மணி நேரத்தில் பகிரப்பட்ட 25 முதல் 100 செய்திகள் வரை பார்க்க முடியும்.

இந்த அம்சம் ஆட்டோமேட்டிக்காக இயங்காது என்பதை வாட்ஸ் அப் தெளிவுபடுத்தியுள்ளது. புதிய உறுப்பினர்களுக்கு பழைய செய்திகள் தெரிய வேண்டுமா என்பதைக் அட்மின்கள் முடிவு செய்வார்கள். 25 செய்திகளிலிருந்து தொடங்கி எவ்வளவு பழைய மெசேஜ்கள் பகிரப்பட வேண்டும் என்பதையும் குரூப் அட்மின் தேர்வு செய்யலாம் என்று பகிரப்பட்டுள்ளது. இந்த அம்சத்தை செயல்படுத்தாமல் செய்யவும் குரூப் அட்மின்களால் முடியும். செட்டிங்ஸில் இதற்கான ஆப்ஷன் தனியாக இருக்கும். வாட்ஸ் அப்பின் இந்த புதிய அப்டேட் பயனர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here