பிரேசிலில் டிங்கு காய்ச்சலுக்கு 391 பேர் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து உள்ளது. டிங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த அந்த நாட்டின் சுகாதாரத்துறையினர் கடுமையாக போராடி வருகிறார்கள். இருப்பினும் டிங்கு காய்ச்சல் பரவலின் வேகம் குறைந்தபாடில்லை. இந்தநிலையில் நாட்டில் டிங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகளை பொதுமக்கள் அதிக அளவில் மேற்கொள்ள அரசு வலியுறுத்தி வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு இதுவரை 15 லட்சத்து 83 ஆயிரம் பேர் டிங்கு காய்ச்சல் பாதிப்பு அடைந்ததாகவும், அதில் 12 ஆயிரத்து 652 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர் எனவும் அந்த நாட்டின் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டிங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி இந்த ஆண்டு இதுவரை 391 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் மேலும் 854 இறப்புகள் விசாரணையில் உள்ளதாகவும் சுகாதார சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென் அமெரிக்க நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு விகிதம் தற்போது 1,00,000 மக்களுக்கு 757.5 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here