பிரதமரின் பதவிக் காலத்தைக் கட்டுப்படுத்தவும் AG, PP பதவிகளைப் பிரிக்கும் மசோதாக்கள் மக்களவையில் தாக்கல்

சட்டத்துறைத் தலைவர், அரசு வழக்கறிஞரின் பாத்திரங்களை பிரிப்பதற்கும், பிரதமரின் பதவிக்காலத்தை இரண்டு பதவிக்காலங்களுக்கு மட்டுப்படுத்துவதற்கும் மசோதாக்கள் இன்று மக்களவையில் முதல் வாசிப்புக்காக தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்கள் அரசியலமைப்பு (திருத்தம்) மசோதா 2025 மற்றும் அரசியலமைப்பு (திருத்தம்) மசோதா (எண். 2) மசோதா 2026 ஆகியவற்றின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டதாக சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்த அமைச்சர் அஸலினா ஓத்மான் சைட் கூறினார்.

இரண்டு மசோதாக்களின் இரண்டாவது வாசிப்பும் தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது நடைபெற உள்ளது என்று அஸலினா கூறினார். இரண்டு மசோதாக்களையும் நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும். அதாவது 222 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறைந்தது 148 பேர் ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here