பள்ளி வகுப்பறையில் மாற்றுத்திறனாளி மாணவி பாலியல் வன்கொடுமை: 13 வயது சிறுவன் மீது குற்றச்சாட்டு

பத்து பஹாட், பிப் 23:

பள்ளி வகுப்பறையில் மாற்றுத்திறனாளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 13 வயது மாணவன், இன்று நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டான்.

கடந்த ஜனவரி 29-ஆம் தேதி, நண்பகல் 12 மணியளவில் இங்குள்ள ஒரு இடைநிலைப்பள்ளியின் (Secondary School) வகுப்பறையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

முதலாம் படிவம் பயிலும் அந்த 13 வயது மாணவன், சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் 16 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவியிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இன்று பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் அருண் நோவல் தாஸ் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை அந்த மாணவன் ஒப்புக்கொண்டான்.

இச்சிறுவன் மீது ‘குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017’-ன் கீழ், பிரிவு 14-ன் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு சிறுவன் என்பதால், நீதிமன்ற நடைமுறைகள் மற்றும் தண்டனை விவரங்கள் சிறுவர் நீதிச் சட்டத்தின் கீழ் அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here