மைக்ரோ தொழில்முனைவோர்களுக்கான நிதி மேலாண்மை, டிஜிட்டல் மய கணக்காய்வுத் திட்டங்கள்

கோத்தாகினபாலு:

SMC Corp குழுமம் அண்மையில் Micro connector திட்டத்தின் வாயிலாக திறன்மிக்க நிதி மேலாண்மை, கணக்காய்வு செயல்பாடுகளை நவீனமயமாக்கும் அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் Klil-Klik Senang Akaun நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கவிழாவில் எஸ்எம்இ கார்ப் தலைவர் டான்ஸ்ரீ பெர்னாட் கிலுக், சபா மாநில அறிவியல், தொழில்நுட்ப புத்தாக்கத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹஜி முகமட் அரிபின் ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொண்டனர்.


இந்த Micro connector திட்டமானது ஆக்கப்பூர்வமான திறன், தொழில்நுட்ப ஆதரவின் வாயிலாக மைக்ரோ தொழில்துறை வர்த்தகத்தின் வல்லமையை உயர்த்துவதற்கான முன்னெடுப்புகளில் ஒன்றாகும். அதேபோல் Klik-Klik Senang Akaun திட்டமானது 2024 ஆம் ஆண்டு Micro connector முன்னெடுக்கப்படும் இணை திட்டம். இந்த நிகழ்ச்சியில் பேசிய டான்ஸ்ரீ பெர்னார்ட், மைக்ரோ தொழில் துறையினருக்கான நிதி மேலாண்மை அவசியம் குறித்து நினைவூட்டினார்.


குறிப்பாக நல்ல நிதி மேலாண்மையானது ஒரு நிறுவனத்தை ஊழியர் சம்பள கடை வாடகை வியாபார கடன் போன்ற விவகாரங்களில் ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து காப்பற்றும் என்றார். தொடர்ந்து பேசிய எஸ்எம்இ கார்ப்பின் தலைமைச் செயல் அதிகாரி ரிஸால், 2024ஆம் ஆண்டில் Micro connector திட்டத்திற்காக எஸ்எம்இ கார்ப் மலேசியா ௯ அமலாக்க கூட்டமைப்பாளர்களை நியமித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இந்த திட்டத்தின் கீழ் 800 மைக்ரோ தொழில் துறையினருக்கு உதவ 3.08 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here