டிரம்ப் அறிவித்த தற்காலிக உலகளாவிய சுங்கவரி 15% ஆக உயர வாய்ப்பு

வாஷிங்டன்,இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஆண்டு பரஸ்பர வரி என்ற பெயரில் கடுமையான இறக்குமதி வரி களை விதித்து அதிர்ச்சியளித்தார். இதில் இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. அத்துடன் ரஷியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக கூடுதலாக 25 சதவீத வரியையும் இந்தியாவுக்கு விதித்து கடுமை காட்டினார்.

டிரம்பின் இந்த கொடூர வரி விதிப்புக்கு எதிராக அமெரிக்க சுப்ரீம் கோர்ட் டில் பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த நிலையில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது என அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு கடந்த வாரம் அதிரடியாக தீர்ப்பு அளித்தது.

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு டிரம்பின் பொருளாதார கொள்கைகளுக்கு பெருத்த அடியாக மாறியது. அதேநேரம் அவர் விதித்த வரிகள் தொடருமா? என்ற சந்தேகமும் எழுந்தது.

ஆனால் வேறு சட்டப்பிரிவின் மூலம் இந்தியா உள்ளிட்ட சர்வதே நாடுக ளுக்கு 10 சதவீத வரி விதிக்கப்படும் என கடந்த 20-ந்தேதி டிரம்ப் அறிவித்தார். இதனையடுத்து இதை 15 சதவீதமாக அதிகரித்து உத்தரவிட்டார். இவ்வாறு அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மற்றும் டிரம்பின் அடுத்த டுத்த அறிவிப்புகளால் வரி விதிப்பில் குழப்பம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த தற்காலிக உலகளாவிய சுங்கவரி 10% இலிருந்து 15% ஆக உயர வாய்ப்பு உள்ளது. 150 நாட்களுக்கு அமலில் இருக்கும் இந்த வரி, 1974 வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 122ன் கீழ் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ ஆணை வெளியான பிறகே புதிய விகிதம் நடைமுறைக்கு வரும் என வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here