சிம் கார்டு இல்லாவிட்டால் இயங்காது…வேலையை ஆரம்பித்த வாட்ஸ் அப்

புதுடெல்லி,இந்​தி​யா​வில் வாட்ஸ் அப், பேஸ்​புக், இன்​ஸ்​டாகி​ராம், டெலிகி​ராம், சிக்​னல், அரட்​டை, ஜியோ சேட், ஸ்னாப்​சேட், சேர் சாட் உள்​ளிட்ட பல சமூக வலை​தளங்​கள் பயன்​பாட்​டில் உள்​ளன. இதில் அதிகம் பேர் பயன்படுத்தும் செயலி எதுவென்றால் கண்ணை மூடிக்கொண்டு வாட்ஸ் அப் என சொல்லிவிடலாம். வாட்ஸ் அப் என்பது அத்தியாவசிய தகவல் தொடர்பு செயலியாகவும் மாறிவிட்டது. வாட்ஸ் அப் செயலியை மொபைல்​போனில் பதி​விறக்​கம் செய்​யும் ​போது சிம் கார்டு அவசியம். இதன்​பிறகு சிம் கார்டை அகற்​றி​னாலோ அல்​லது சிம் கார்டு செயலிழந்​து​விட்​டாலோ கூட செயலிகள் தொடர்ந்து பயன்​பாட்​டில் இருக்​கும்.

இதனால் சில முறைகேடுகளும் நடக்கின்றன. இதற்கு கடிவாளம் போட மத்திய அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக எடுத்தது. இதன்படி, மொபைல்​போனில் ஆக்​டிவ் சிம் கார்டு இருந்​தால் மட்​டுமே வாட்ஸ் அப் உள்​ளிட்ட செயலிகளை பயன்​படுத்த முடி​யும். சிம் கார்டு இல்​லை​யென்​றால் சமூகவலைதள செயலிகள் தானாகவே செயலிழந்​து ​விடும் என்று மத்​திய தொலைத்​தொடர்​புத் துறை புதிய விதி​களை அறிவித்தது. இந்த விதிகளில் மாற்றம் செய்ய மத்திய அரசு மறுத்துவிட்ட நிலையில், சிம் அடிப்படையிலான சரிபார்ப்பை (SIM-based verification) செய்வதற்கான பணிகளை வாட்ஸ் அப் தொடங்கியுள்ளது. வாபீட்டாஇன்போ வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆண்ட்ராய்டு 2.26.8.6 பீட்டா வெர்ஷனில் இதற்கான சோதனை ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் விரைவில் ஆக்டிவ் சிம் கார்டு இல்லாவிட்டால் வாட்ஸ் அப் செயல்படாத நிலை ஏற்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here