சபாவில் மோசமடையும் வெள்ளம் : பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,442-ஆக உயர்வு; 38 முகாம்கள் திறப்பு!

கோத்தா கினபாலு | பிப்ரவரி 28, 2026:

சபாவில் நீடித்து வரும் கனமழையினால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு இன்று காலை மேலும் அதிகரித்துள்ளது. இன்று காலை 7:30 மணி நிலவரப்படி, பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,442-ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றிரவு பதிவான 6,663 என்ற எண்ணிக்கையை விட அதிகமாகும்.

சமூக நலத்துறையின் ‘இன்போபெஞ்சனா’ (Infobencana) தரவுகளின்படி, தற்போது 5 மாவட்டங்களில் உள்ள 2,803 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தெனோம் (Tenom), சிபித்தாங் (Sipitang), மெம்பாகுட் (Membakut), கெமாபோங் (Kemabong), பியூஃபோர்ட் (Beaufort) ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இதுவரை மொத்தம் 38 தற்காலிக நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் பெண்கள்: 2,589 | ஆண்கள்: 2,302 | சிறுவர்கள்: 1,218 | சிறுமிகள்: 1,164 |குழந்தைகள்: 169 (73 ஆண் குழந்தைகள் மற்றும் 96 பெண் குழந்தைகள்) ஆகியோர் தங்கியுள்ளனர்.

பியூஃபோர்ட் போன்ற பகுதிகளில் மூன்று நாட்களாகப் பெய்த கனமழையினால் புனித பால் மேல்நிலைப்பள்ளி (SM Saint Paul) உள்ளிட்ட பல கட்டிடங்கள் இன்னும் வெள்ள நீரில் மூழ்கியே காணப்படுகின்றன. தொடர்ந்து அதிகரித்து வரும் நீர்மட்டம் காரணமாக மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here