போக்குவரத்து சிக்னலை மீறியதற்காக நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் மன்னிப்பு கோரினார்

சிரம்பான், மார்ச் 4:
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருண், தனது அதிகாரப்பூர்வ வாகனம் போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கை மீறிச் சென்றதற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.

அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளுக்கு சரியான நேரத்திற்குச் செல்வதற்காகத் தனது ஓட்டுநர் சில நேரங்களில் இவ்வாறு செய்ய வேண்டியிருந்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.

தமக்கு ஒரு நாளில் பல அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருப்பதாலும், நெருக்கடியான கால அட்டவணை காரணமாகவும், நேரத்தை மிச்சப்படுத்தச் சில சமயம் சிக்னல்களை மீற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

வாகனத்தில் ஒரு காவல்துறை அதிகாரி இருந்ததாகவும், முறையான சிக்னல்களைப் பயன்படுத்தியே மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனம் இயக்கப்பட்டது என்றும் அவர் விளக்கமளித்தார்.

இது தொடர்பாகத் தகுந்த அதிகாரிகளிடம் முறையான அனுமதி கோரி கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வழக்கமாக, மாநிலத் தலைவர்களுக்குச் சில முக்கிய விவகாரங்களில் இத்தகைய சலுகைகள் வழங்கப்படுகின்றன. இல்லையெனில், சிவப்பு விளக்கை மீறிச் செல்ல நான் துணியமாட்டேன்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

சமூக வலைதளங்களில் மந்திரி பெசாரின் வாகனம் சிக்னலை மீறிச் செல்லும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here